படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 6-வது பதிவு
1. தொழில் நுட்பத்தின் உச்சம் !
ஒரு முறை, ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்,பீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர், "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் !
சில நிமிடங்களுக்குப் பின், ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க, "அது எனது செல்·போன். அதற்காக, என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது.
சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால், அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன், அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும், "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர்.
உடனே நமது புத்திசாலி சர்தார், சமயோஜிதமாக, "ஓ, அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்.
2. நரகமும் தொலைத் தொடர்பும் !
ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன் மற்றும் ஒரு மென்பொருளாளர் ஆகியோர் இறந்தவுடன், நரகத்திற்கு சென்றனர். அரசியல்வாதி, "எந்நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்று அறிய தொலைபேச விரும்புகிறேன்" என்று கூறி, தொலைபேசியில் 5 நிமிடங்கள் பேசி விட்டு, நரகத்திலிருந்த சாத்தானைப் பார்த்து, "நான் பேசியதற்கு கட்டணம் எவ்வளவு?" என்றவுடன், சாத்தான், "5 லட்சம் ரூபாய்" என்றது ! அவர் பதில் பேசாமல் ஒரு செக் எழுதிக் கொடுத்தார் !
அடுத்து, அந்தத் திருடன் தன் சகாக்களுடன் தான் பேச விரும்புவதாகக் கூறி, தொலைபேசியில் 2 நிமிடங்கள் பேசினான். "எவ்வளவு தர வேண்டும்?" என்றதற்கு சாத்தான், "10 லட்சம் ரூபாய்!" என்றவுடன், திருடன் கடுப்புடன் 10 லட்சத்திற்கு செக் கொடுத்தான் !
அந்த மென்பொருளாளன், "நானும் எனது தகவல் தொழில் நுட்பத் துறை நண்பர்களுடன் அளவளாவ ஆசைப்படுகிறேன்" என்று சாத்தானிடம் சொல்லி விட்டு, தொலைபேசியில், தொழில்நுட்பம், பிராஜெக்ட் மற்றும் மேலாளர்கள் குறித்து தொடர்ந்து 20 மணி நேரம் கதைத்து விட்டு, சாத்தானிடம் அலட்சியமாக, "எவ்வளவு கட்டணம்?" என்றான்.
சாத்தான், "நானூறு ரூபாய்!" என்றவுடன் அதிர்ந்து போன அப்பொறியாளன், "என்ன, நானூறு ரூபாய் தானா!!!" என்றவுடன் சாத்தான், "ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்திற்கு தொலைபேசினால் அது உள்ளூர் அழைப்பு (LOCAL CALL) தான்!!!" என்றது !!!!!!!!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
3 மறுமொழிகள்:
இப்பதிவுக்கு சம்பந்தமில்லா பின்னூட்டம்:: பாலா, தாங்கள் எனக்களித்த செய்தியின் மறுமொழி இங்கே
பாலா
ஏற்கனவே படித்தவை என்ற போதிலும்... நன்றாக சிரித்தேன் , காரணம் அப்போது மெயிலில் வந்தது - படித்தது ஆங்கிலத்தில்..
இப்போது ..வலைப்பூ வில் வந்துள்ளது - தமிழில்
நன்றி
வீ எம்
வீ. எம்,
Thanks !!!
Pl. send a mail to me with your contact no. (at chennai).
regards,
BALA
Post a Comment